விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் டைட்டில் இதுவா? சிஎஸ்கே ரசிகர்கள் குஷி..!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (07:43 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 68 வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். 
 
ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் தற்போது கசிந்து உள்ளது. இந்த படத்திற்கு ’சிஎஸ்கே’ என்று டைட்டில் வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பெரும் குஷியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுகளுக்கு முன்னர் சிஎஸ்கே அணிக்கு பிராண்ட் அம்பாசிடராக விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்