குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் அஸ்வின் மட்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.