ஆனால், கடந்த சில வருடங்களில் வைரமுத்துவை புகழ்ந்து அவர் பல பதிவுகளை இட்டிருந்தார். 2014ம் ஆண்டு வைரமுத்து பத்மபூஷன் வாங்கிய போது அவர் இட்ட டிவிட் உட்பட, பல பதிவுகளை தற்போது எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
13 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு சுவிட்சர்லாந்தில் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் எனக்கூறியுள்ள சின்மயி, அந்த சம்பவம் நடந்த பின் எப்படி இப்படி டிவிட்களை செய்தார்? இது அட்மின் போட்டதா? எனக்கேள்வி எழுப்பி நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.