இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.
சின்மயியிக்கும் டப்பிங் யூனியனுக்கும் இடையில் பிரச்சனை வந்து அவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இந்நிலையில் யூனியனில் மெம்பராக இல்லாத ஒருவரை வைத்து டப்பிங் பேசவைக்கக் கூடாது என்ற விதிகளை சுட்டிக்காட்டி இப்போது டப்பிங் யூனியனைச் சேர்ந்தவர்கள் லியோ படக்குழுவினரிடம் பிரச்சனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.