தமிழ் சினிமாவில் பருத்தி வீரன், ராம் போன்ற கிளாசிக் படங்களைக் கொடுத்து முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்தள்ளார்.
அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.