'மிரட்டல் போஸ்டர்’ காரணமாக ஒருவர் கூட படம் பார்க்க வரவில்லை: காட்சி ரத்து

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2020 (20:05 IST)
இந்து அமைப்புகள் விடுத்த மிரட்டல் காரணமாக ஒருவர் கூட படம் பார்க்க தியேட்டருக்கு வரவில்லை என்பதால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நடிகை தீபிகா படுகோனே நடித்த ’சப்பக்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் இரண்டு திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது. ஆனால் இந்த இரண்டு திரையரங்குகளிலும் இந்து அமைப்பு ஒன்று ’இன்சூரன்ஸ் இருந்தால் மட்டும் இந்த படத்தை பார்க்க வாருங்கள்’ என்று மிரட்டல் போஸ்டர் ஒன்றை ஒட்டியிருந்ததாக தெரிகிறது.
 
இந்த போஸ்டரை பார்த்து ஒருவர் கூட இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வரவில்லை என்பதால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தியேட்டர் நிர்வாகம் அறிவித்தது. இந்து அமைப்பின் இந்த மிரட்டலுக்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவீட்டை நடிகை நக்மா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்