நீச்சல் உடையில் முதல் முறையாக நடித்த நடிகை; வெட்டி வீசிய சென்சார் போர்டு
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (14:07 IST)
மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கேத்தரின் தெரசா தெலுங்கு படத்தில் முதல் முறையாக நீச்சல் உடையில் நடித்த காட்சிகள் சிலவற்றை சென்சார் போர்டு வெட்டி வீசியுள்ளனர்.
மெட்ராஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகை கேத்தரின் தெரசா நடித்துள்ள கௌதம் நந்தா என்ற தெலுங்கு திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இவர் முதல் முறையாக நீச்சல் உடையில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் தணிக்கை சான்றிதழுக்கு சென்றபோது கேத்தரின் தெரசாவின் நீச்சல் உடை காட்சிகள் சிலவற்றை வெட்டி வீசியுள்ளனர். கவர்ச்சி அதிகமாக இருந்த காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு மற்ற காட்சிகளை வைத்ததால் படக்குழுவினர் ஏற்றுக்கொண்டனர்.
மும்பை நடிகை ஒருவர் நீச்சல் உடையில் நடித்த காட்சிக்கு தணிக்கையில் ஒரு வெட்டு கூட இல்லையாம். இதனால் படக்குழுவினர் தரப்பில் புகார் தெரிவித்தனர். மேலும் கேத்தரின் தெரசா தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்துள்ளாராம்.