அந்நியன் இந்தி ரீமேக்… ஷங்கருக்கு உதவியாக களமிறங்கும் பாலிவுட் இயக்குனர்!
செவ்வாய், 4 மே 2021 (17:10 IST)
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன் திரைப்படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் ரண்வீர் சிங் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்க உள்ளனர். அதற்கு முன்னதாக ஷங்கர் ராம்சரண் இயக்கத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளார்.
இப்போது அந்நியன் படத்தின் திரைக்கதையை இந்தி ரசிகர்களுக்கு ஏற்றவாறு மாற்ற பாலிவுட் இயக்குனர் குழு ஒன்று சென்னையை முற்றுகையிட்டு ஷங்கர் அலுவலகத்தில் பணிகளை மும்முரமாக செய்து வருகிறதாம்.