கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படம் பற்றி ப்ளு சட்டை மாறன் தன் Tamiltalkies என்ற யூடியூப் தளத்தில், வெ.த.கா படத்தைப் பற்றிய விமர்சனம் செய்து வீடியோவைப் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது, பேசிய சிம்பு, உருவக்கேலி செய்வது தவறு என்று தன் கருத்தைக் கூறியிருந்தார்.
அதன்பின், சிம்பு நடிப்பில் வெளியான காளை, தம் ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல் வரிகளில் உருவகேலி இருப்பதை ப்ளூ சட்டை மாறன் தன் டுவிட்டரில் பதிவிட்டிருனந்தார்.
இதையடுத்து, இன்று சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டில் வெளியான சிலம்பாட்டம் படத்தில் இடம்பெற்ற் ஒரு காட்சியை குறிப்பிட்டு, அர்ச்சகராக சிம்பு. கோவிலுக்குள் கரண்ட் கட் ஆனதும்.. கன்னிப்பெண்கள் எல்லாம் சேர்ந்து இவர் உடம்பில் Massage செய்யும் காட்சி.