பிகில், கைதி: உண்மையில் எந்த படம் வெற்றிப்படம்?

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:58 IST)
கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த ‘கைதி’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. இந்த இரண்டு படங்களில் பிகில் படம் சுமார் ஆயிரத்து 100 திரையரங்குகளிலும் கைதி படம் 300 திரையரங்குகளிலும் வெளியானது. அதுமட்டுமின்றி பிகில் திரைப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இரண்டு படங்களும் வெளியாகி ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் பிகில் திரைப்படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல் கைதி திரைப்படம் ரூபாய் 50 கோடி செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
பிகில்  திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு வருட கால தயாரிப்பு , 180 கோடி பட்ஜெட்டில் உருவான படம் என்பதும் இந்த படம் ரூ.180 கோடி முதலீடு செய்து கிடைத்த லாபம் ரூ 20 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் கைதி திரைப்படம் 6 மாதங்களில் ரூபாய் 30 கோடி பட்ஜெட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த படமும் ரூபாய் 20 கோடி லாபம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ரூபாய் 180 கோடி முதலீடு செய்து 20 கோடி லாபம் பார்த்த பிகில் திரைப்படம் வெற்றிப்படமா? அல்லது 30 கோடி செலவு செய்து ரூபாய் 20 கோடி லாபம் பெற்ற கைதி திரைப்படம் வெற்றிப்படமா/  என்பதை ரசிகர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம். உண்மையான வெற்றி படம் எது என்பதை கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்