தமிழ் ராக்கர்ஸின் தீபாவளி கொண்டாட்டம்: அடுத்தடுத்து லீக்காகப்போகும் புதுப்படங்கள்!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (19:32 IST)
தமிழ் சினிமாவின் தீய சக்தியாக பார்க்கப்படும் தமிழ் ராக்கர்ஸ் கடந்த சில வருடங்களாகவே திரையுகினரை ஆட்டிப்படைத்து வருகிறது. எந்தவொரு புதுப்படம் வந்தாலும் குறிப்பாக உச்ச நட்சத்திரங்கள் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரிலீசாகும் புதுப்படங்களை அடுத்தநாளே வெளியிட்டு அதிர வைத்து வருகிறது. 


 
அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரன், சிவப்பு மஞ்சள் பச்சை  போன்ற படங்கள் வெளியாகி படக்குழுவினருக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. இருந்தாலும் எவ்வளவு முயற்சித்தும் தமிழ் ராக்கர்ஸை யாராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதற்கு பின்னால் மிகப்பெரிய கூட்டமே இயங்கி வருகிறது. 
 
இந்நிலையில் தீபாவளி தினத்தை குறி வைத்து ரிலீசாகவுள்ள படங்களான கைதி, பிகில் தமிழ் ராக்கர்ஸிற்கு இரையாகவுள்ளது. இதில் கைதி படக்குழு முன்னரே, படத்தை ஆன் லைனில் இணையதளங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றமும் அப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதில் சிக்கியிருப்பது விஜய்யின் பிகில் தான். படம் வெளியான அன்றே எச்டி ப்ரிண்டில் வெளியிட்டாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்