தமிழில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்ஷிக்கு கடந்த 2011 ஆம் ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாகவும் பின்னர் சில வருடங்களிலேயே விவாகரத்தும் ஆகிவிட்டதாக புதிய சர்ச்சை ஒன்று தற்போது கிளம்பியுள்ளது.
காரணம், சாக்ஷி கவினுடன் காதல் நாடகமாடிவருவது யாருக்கும் பிடிக்கவில்லை. இதனால் கடந்த வாரமே வெளியேறவேண்டிய சாக்ஷி மீரா மிதுனால் தப்பித்தார். ஆம் , மீரா மிதுன் சேரனுடன் வீண் பழி சுமத்தியதால் அவர் கடந்தவாரம் வெளியேற்றப்பட்டார். இதனால் தப்பித்த சாக்ஷி இந்த வாரம் நிச்சயம் வெளியேற்றப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதாவிடம் சாக்க்ஷி விவாகரத்து பெற்றவர் என்று ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வனிதா, அவருக்கு திருமணமே ஆகவில்லை பிறகு எப்படி விவாகரத்து...? இது போன்ற ஆதாரமற்ற வதந்திகளை தேவையில்லாமல் பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.