நடிகை அஞ்சலி ஸ்ரீவஸ்தா மும்பை ஜூஹூ பகுதி, பரிமல் சொசைட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். ஆனால் அவரது குடும்பத்தினர் அலஹாபாத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலையும் அஞ்சலியை தொடர்பு கொண்டனர். ஆனால் அப்பொழுதும் அஞ்சலியை தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் தங்கள் மகள் தங்கியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து தங்களால் அஞ்சலியை தொடர்புகொள்ள முடியவில்லை நேரில் சென்று பார்த்து தகவல் சொல்லுங்கள் என கூறியுள்ளனர்.