ஜுலை 16 -ஆம் தேதி ஆடி மாதம் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் பொதுவாக படங்களுக்கு பூஜை போடுவதில்லை. முன்பெல்லாம், ஆடி மாதம் தொடங்குவதற்கு ஒருவாரம் முன்பு ஏவிஎம் ஸ்டுடியோ பரபரப்பாக காணப்படும். தினம் இரண்டு பூஜைகளாவது அங்கு நடக்கும். படம் எடுக்கிறார்களோ இல்லையே... பூஜை போடுவதில் குறைவிருக்காது.