பேச்சிலர்… வயது வந்தோருக்கான படமா? இயக்குனர் விளக்கம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:11 IST)
ஜி வி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் உருவாகியுள்ள பேச்சிலர் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் மிகவும் பிசியானவர் ஜீவி பிரகாஷ்குமார் என்றால் அது மிகையில்லை இசையமைப்பது மட்டும் என்ற திரைப் படங்களில் ஹீரோவாகவும் அவர் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று பேச்சிலர். இந்த படத்தின் டீஸர் நேற்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

டீசரின் காட்சிகள் படம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கும் படம் போல இருந்தது. ஆனால் அதை மறுத்துள்ளார் இயக்குனர் சதீஷ். ஒரு இளைஞனின் வாழ்வில் குறுக்கிடும் பெண்ணால் அவன் என்னவாகிறான் என்பதே கதை. இதை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்