மீண்டும் தள்ளிப் போகும் அயலான் படப்பிடிப்பு – காரணம் இவர்தான்!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (10:12 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் அடையாளமே தெரியாத அளவில் இந்த வேடத்திற்காக வெளிநாட்டிலிருந்து மேக்கப்மேன் வரவழைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் நிவர் புயலின் போதும் அதைப் பொருட்படுத்தாமல் படத்தின் காட்சிகளைப் படமாக்கியது படக்குழு. இதையடுத்து ஜனவரி மாத தொடக்கத்தில் இறுதிக் கட்ட படப்பிடிப்பை தொடங்க இருந்தது. ஆனால் இப்போது அந்த படத்தின் கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங்குக்கு கொரோனா உறுதியாகியுள்ளதை அடுத்து அவர் குணமாகி வந்து தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்த பின்னரே படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதால் எதிர்பார்த்ததை விட சில நாட்கள் பின்னர் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்