அயலான் படத்துக்கு கேரளாவில் இவ்வளவு டிமாண்டா?... இதுவரை இல்லாத தொகைக்கு விற்பனை!

சனி, 16 டிசம்பர் 2023 (07:25 IST)
சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது நீதிமன்றத்தில் டி எஸ் ஆர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளது. அயலான் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே ஜே அர் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியக் கடனை கட்டாமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என மனுவில் கூறியிருந்தனர்.

இதை ஏற்று விசாரித்த நீதிமன்றம் அயலான் படத்தை நான்கு வாரங்களுக்கு ரிலீஸ் செய்யக் கூடாது தடை விதித்துள்ளது. இதனால் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, அயலான் திரைப்படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை இதுவரை சிவகார்த்திகேயனின் படத்துக்கு இல்லாத அளவுக்கு 75 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்