இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 26ஆம் தேதி தொடங்கும் என்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைதி நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.