இந்நிலையில் அருண் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போது இருக்கிறார். இதற்கிடையில் டீனா என்கிற பெண்ணை அவர் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். மணக்கோலத்தில் பெண்ணுடன் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அருண் பிரபு சிவகார்த்திகேயனுக்கு ஒரு வகையில் தம்பி முறை உறவுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.