அருள்நிதியின் ‘தேஜாவு’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

புதன், 13 ஜூலை 2022 (18:08 IST)
அருள்நிதி நடித்த ’டி பிளாக்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான தேஜாவு என்ற திரைப்படம் ஜூலை 22-ஆம் தேதி ரிலீசாக உள்ளது
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் கவனித்து வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை அதாவது ஜூலை 14ம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தேஜாவு’படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
 
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, PG முத்தையா ஒளிப்பதிவை மேற்கொள்ள, படத்தொகுப்பாளராக அருள் E சித்தார்த், சண்டை பயிற்சியாளராக பிரதீப் தினேஷும் கலை இயக்குனராக வினோத் ரவீந்திரனும் பணியாற்றியுள்ளனர்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்