ஆர்யா நடிப்பில் அரண்மனை 3! – இன்று மாலை ட்ரெய்லர்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:18 IST)
ஆர்யா நடித்து சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை மூன்றாம் பாகத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் ’அரண்மனை 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சுந்தர்சி,ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகிபாபு, குஷ்பூ, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி தயாரித்து உள்ளனர்

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்