விஜய் தேவரகொண்டாவுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதித்த நடிகை

வெள்ளி, 25 மே 2018 (16:58 IST)
விஜய் தேவரகொண்டாவுக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார் அனு இம்மானுவேல்.
 
விஷால் ஜோடியாக ‘துப்பறிவாளன்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதன்பிறகு தமிழில் ஒரு படம் கூட நடிக்காவிட்டாலும், தெலுங்கில் பயங்கர பிஸியாக இருக்கிறார். ‘அஞ்ஞாதவாசி’, ‘நா பேரு சூர்யா நா இல்லு இண்டியா’ படங்களில் நடித்த அனு, ‘சைலஜா ரெட்டி அல்லுடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில், ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்துக்காக கெஸ்ட் ரோலில் நடிக்க அனுவிடம் கேட்டிருக்கிறார்கள். விஜய் தேவரகொண்டா என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் அனு. இந்தப் படத்தை பரசுராம் இயக்குகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்