வா… சாமீ….! தொடங்கியது அண்ணாத்த முன்பதிவு! – ரசிகர்கள் உற்சாகம்!

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:14 IST)
தீபாவளிக்கு வெளியாகும் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கியுள்ள படம் அண்ணாத்த. மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவுகள் இன்று தொடங்குகின்றன. அண்ணாத்த படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளதால் வேகவேகமாக டிக்கெட்டுகள் தீர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்