அதிரடிக்கு ரெடியான அண்ணாத்த ரஜினி! – ஷூட்டிங் புகைப்படம் வைரல்!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:36 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்பட ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் ஷூட்டிங் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பு பணிகளின் போது அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா இருந்ததாலும், ரஜினிகாந்தின் திடீர் உடலநல குறைவாலும் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்காக முன்னதாக தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்ற ரஜினி அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மும்முரமாக படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ரஜினி – சிறுத்தை சிவா பேசிக் கொண்டிருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்