பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் உருவாகவிருப்பதாகவும், பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது தெரிந்ததே
பிரசாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை பொன்மகள்வந்தாள் இயக்குனர் பெடரிக் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தில் தபு கேரக்டரில் சிம்ரன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது