தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த அமித் பார்கவை காதலித்து இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டனர்
கணவர் பாடிய `கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்கும்வரை வயித்துக்குள்ள அமைதியாகவே இருந்தத குழந்தை ஒருநாள் பாட்டை மாத்தி `அடிச்சுத் தூக்கு’ பாடலைப் பாடியதும் பாட்டைக் கேட்ட மறு நிமிஷம், என் வயித்துக்குள் அப்படியொரு உதை விழுந்தது’ எனப் பூரிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.