அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். இவர்கள் இணைந்து படம் செய்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். முக்கியமாக, படத்துக்கு சந்தன தேவன் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சந்தன காற்று என்ற பெயரில் ஒரு படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். சந்தன தேவன் என்ற பெயரில் எம்.ஆர்.ராதா நடித்த படம் ஒன்றும் உள்ளது.