வலிமை படத்தில் இணைந்த அஜித்தின் முதல் பட நடிகரின் மகன்

ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (16:20 IST)
அஜித் அறிமுகமான முதல் படம் ’அமராவதி’ என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்த பானு பிரகாஷ் என்பவரின் மகன் ராஜ் அய்யப்பா என்பவர் தற்போது ’வலிமை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளார்
 
அமராவதி படம் வெளியான பின்னர் பல வருடங்களுக்குப் பின்னர் ஒரு நாள் தற்செயலாக பானு பிரகாஷ் அஜித்தை சந்தித்த போது, அஜித் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு விரைவில் அவர் நடிகர் ஆவார் என்று கூறியதாகவும், தற்போது அவர் கூறியபடியே நடிகராகியிருப்பதாகவும், அதுவும் அஜித் படத்திலேயே முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானது பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பானு பிரகாஷ் கூறியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது 
 
ராஜ் அய்யப்பா ஏற்கனவே அதர்வா முரளி நடித்த ’100’ படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வலிமை படத்திலும் அவருக்கு வில்லத்தனமான ஒரு கேரக்டர்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வட இந்தியாவிலும் அதனை அடுத்து சுவிட்சர்லாந்திலும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நாயகியாக ’காலா’ படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்