மறுபடியும் நிவின் பாலியுடன் ஜோடிபோட்ட அமலா பால்

ஞாயிறு, 23 ஜூலை 2017 (14:01 IST)
நிவின் பாலி – அமலா பால் ஜோடி, இரண்டாவது முறையாக ஒரு படத்தில் இணைந்துள்ளது. 


 

 
நிவின் பாலி – அமலா பால் இருவரும் இணைந்து, ‘மிலி’ என்ற படத்தில் ஜோடியாக நடித்தனர். 2015ஆம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அதன்பிறகு, தற்போது மறுபடியும் ஜோடி சேர்ந்துள்ளனர். ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தை, ’36 வயதினிலே’ ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கைதான் இந்தக் கதை.
 
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஹைவேயில் செல்லும் பணக்காரர்களிடம் இருந்து பிடுங்கி, எதுவும் இல்லாத ஏழைகளுக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நிவின் பாலி. அவரைக் காதலிப்பவராக அமலா பால் நடிக்கிறார். தமிழில் அமலா பால் நடித்துள்ள ‘விஐபி 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ இரண்டு படங்களும் விரைவில் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்