அல்லு அர்ஜூன் படம் 2 பாகங்கள்…. பட்ஜெட் ரூ.250 கோடி…. டோலிவுட் ஆச்சர்யம்!

Webdunia
புதன், 12 மே 2021 (19:31 IST)
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படத்தின் பட்ஜெட் தெலுங்கு திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா .

இப்படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த ஆண்டில்  மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களுள் இதுவும் ஒன்று.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்கள் இந்த ட்ரெய்லரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மரக்கட்டைகள் கடத்தல் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அல்லு அர்ஜுன் மிக அபாரமாக நடித்துள்ளதாகவும் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருப்பதாகவும் டிரைலரை பார்த்தவர்களால் கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது, ஆனால் அவர் எதிர்பாராத விதமாக நடிக்க முடியாததால் அவருக்கு பதிலாக பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மேலும், புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், இப்படத்தின் பட்ஜெட்  சுமார் ரூ.250 கோடி எனவும், இது சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு இணையானது எனவும் திரையுலகினர் கூறிவருகின்றனர்.

இன்று கொரொனாவில் இருந்து குணமடைந்த அல்லு அர்ஜுன் விரைவில் இப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் அளிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்