உச்சக்கட்டத்தில் 'விவேகம்' வியாபாரம்: சாதனை வசூல் உறுதி என தகவல்

Webdunia
புதன், 14 ஜூன் 2017 (05:01 IST)
தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய முந்தைய இரண்டு படங்களான 'வீரம்' மற்றும் 'வேதாளம்' சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'விவேகம்'. சுமார் 120 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தற்போது நடந்து வருகிறது



 


இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக கோவை பகுதியில் வியாபாரம் ரூ.9 கோடிக்கு ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவரை வெளியான அஜித் படங்களில் இந்த படம் தான் கோவையில் அதிக தொகைக்கு வியாபாரம் ஆன படம் என்பது குறிப்பிடத்தக்கது

கோவை மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, சேலம் உள்பட அனைத்து பகுதிகளிலும் மிகப்பெரிய தொகைக்கு கேட்கப்படுவதால் இந்த படம் மிகப்பெரிய வியாபாரத்தை பெறும் என்றும் அதேபோல் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இதுவரையிலான பல சாதனைகளை முறியடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்