சிவா அஜித்தை வைத்து கிராமத்துப் பின்னணியில் வீரம் படத்தை எடுத்தவர். வேதாளம் குறித்து முதலில் வந்த செய்திகளும் சென்டிமெண்டாகவே இருந்தன. அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார், அஜித் அவரை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்கிறார் என.
ஆனால், படத்தின், வேதாளம் என்ற பெயரும், அஜித்தின் சம்மர்கட் கெட்டப்பும், படத்தின் கலரை மாற்றின. நேற்று நள்ளிரவு வெளியான டீஸர் மொத்தத்தையும் மாற்றியுள்ளது.
டீஸர் நெடுக ஒரே ஆக்ஷன் அதகளம். விமானமும், துப்பாக்கியுமெல்லாம் சர்வசாதாரணமாக வந்து போகிறது. போதாததற்கு, தெறிக்கவிடலாமா என்று அஜித் கேட்கும் வசனம் வேறு ரசிகர்களை உசுப்பேற்றுகிறது.