அஜித்தின் துணிவு படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:48 IST)
அஜித் நடித்து வரும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது.

அஜித் 61 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்பின் பலனாக நேற்று படத்தின் தலைப்பு ‘துணிவு’ என அறிவிக்கப்பட்டு முதல் லுக் போஸ்டரும் வெளியானது. அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த போஸ்டரும் தலைப்பும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. ஒரு மாதம் அங்கு நடக்கும் படப்பிடிப்போடு மொத்த ஷூட்டிங்கும் முடிகிறது. இதையடுத்து படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றொரு முன்னணி நிறுவனமான ஜி நிறுவனம் படத்தைத் தயாரிப்பாளர்களில் ஒன்றாக இருக்கையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்