அஜித் படத்தில் ‘அருவி’ அதிதி பாலன் - வைரல் புகைப்படம்

புதன், 3 ஜனவரி 2018 (13:50 IST)
அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தில் ‘அருவி’ அதிதி பாலன் ஏற்கெனவே நடித்துள்ளார் என்ற ஆச்சரியமான விஷயம்  தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீஸாகி அனைவராலும் கொண்டாடப்பட்ட படம் ‘அருவி’. இந்தப் படத்தில், அதிதி பாலன்  முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 500 பெண்கள் ஆடிஷன் செய்யப்பட்டு, அதில் தேர்வானவர் அதிதி. அவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், அவர் ஏற்கெனவே அஜித் படத்தில் நடித்துள்ளார் என்ற விவரம் கிடைத்துள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில்  அஜித் நடித்த படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தில் த்ரிஷாவின் தோழியாக சில காட்சிகளில் நடித்துள்ளார் அதிதி.  த்ரிஷாவுடன் பரதநாட்டியம் ஆடுபவராக அதிதி பாலன் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தில் இருந்து அதிதியின் புகைப்படம்  ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்