மீண்டும் ஒரு பாய்காட்டா… அஜய் தேவ்கன் நடிக்கும் பாலிவுட் படத்துக்கு எதிர்ப்பு!

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (16:07 IST)
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கும் தேங்க் காட் என்ற திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.

பாலிவுட்டில் சமீபகாலமாக பட்ங்களுக்கு எதிராக பாய்காட் ட்ரண்ட் இணையத்தில் உருவாகி வருகிறது. அமீர் கானின் லால் சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களுக்கு இப்படி ஹேஷ்டேக்குகள் உருவாகி படத்தின் வசூலை கடுமையாக பாதித்தன.

இந்நிலையில் இப்போது அஜய்தேவ்கன் மற்றும் ரகுல் ப்ரீத்சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் தேங்க் காட் படத்துக்கும் இதுபோல எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த படத்தில் சித்ரகுப்தனாக அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இதில் சில காட்சிகளை சித்ரகுப்தனை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் தங்கள் உணர்வுகளைப் புண்படுத்துவதாக கூறி சிலர்  இந்த படத்துக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அதுபோன்ற காட்சிகளை நீக்கவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்