தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாகவும் எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பவராகவும் இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். டெம்ப்ளேட் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் காக்கா முட்ட படத்தில் நடித்திருந்தார். நயன்தாராவுக்கு என்று எப்படி ஒரு மார்க்கெட் இருக்கிறதோ அதுபோல இவருக்கும் ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது.