புருஷனா இருந்தாலும், என் கேரக்டர்தான் முக்கியம் – ஐஸ்வர்யா ராய்

சனி, 24 ஜூன் 2017 (16:54 IST)
தன் கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால், கணவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.


 

பிரபல பாலிவுட் இயக்குனர் தயாரிக்கும் படம் ‘குலாப் ஜாமூன்’. புது இயக்குனர் இயக்கும் இந்தப் படத்தில், ஹீரோவாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் கேட்டதற்கு, ‘முடியாது’ என்று மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் ‘குச் நா கஹோ’, ‘குரு’, ‘சர்க்கார் ராஜ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இந்தப் படத்தில் தன்னுடைய போர்ஷன் திருப்தி இல்லாததால், நடிக்க மறுத்திருக்கிறார். ‘கதையை மாற்றி, எனக்கும் வலிமையான கேரக்டராக இருந்தால் நடிக்கத் தயார்’ என்று கூறியுள்ளார். தற்போது அனில் கபூரின் ‘பேனி கான்’ படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் படத்துக்கும் ஓகே சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்