திருமணத்தில் ஆர்வம் இல்லை என சொன்ன ஐஸ்வர்யா லஷ்மி… இப்போ காதலில்!

வியாழன், 12 ஜனவரி 2023 (16:09 IST)
பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா லஷ்மி, நடிகர் அர்ஜுன் தாஸுடன் காதலில் இருப்பதை நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அர்ஜுன் தாஸை கட்டி அணைத்தபடி இருக்கும் இந்த புகைப்படத்தில் கீழே லவ் எமோஜியை அவர் பதிவு செய்த அடுத்த இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் பற்றி பேசிய அவர் “எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை” எனக் கூறியிருந்தார். ஆனால் அப்படி சொல்லி சில மாதங்களுக்குள்ளாகவே காதலில் விழுந்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்