பொருத்தமானவர் கிடைத்ததும் திருமணம் - கல்யாண மூடில் ஸ்ரேயா

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (13:54 IST)
த்ரிஷாவுக்கும், ஸ்ரேயாவுக்கும் திரைத்துறையில் கிட்டத்தட்ட ஒரே சீனியாரிட்டி. 14 வருடங்களாக ஸ்ரேயா சினிமாவில் இருக்கிறார். த்ரிஷா தமிழ், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்க ஸ்ரேயாவுக்கு மட்டும் இரண்டு மொழிகளிலும் வாய்ப்புகள் இல்லை. இந்தியில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக அவர் நடித்த த்ரிஷ்யம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
படங்கள் இல்லையே தவிர கிசுகிசுவுக்கு பஞ்சமில்லை. தெலுங்கின் சில முன்னணி இளம் நடிகர்களுடன் ஸ்ரேயாவை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதனை கேள்விப்பட்டவர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.
 
திரைத்துறையில் உள்ள யாரையும் காதலிக்கவில்லை. நடிகர்களுடன் எனக்கு தொழில்ரீதியிலான தொடர்பு மட்டுமே உள்ளது. பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார். 
 
மார்க்கெட் போன நடிகைகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கை திருமணம். ஸ்ரேயா மட்டும் விதிவிலக்காக முடியுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்