பிரபல பாலிவுட் நடிகையான பாயல் கோஷ் தென்னிந்திய சினிமா பாலிவுட் சினிமாவை சிறந்தது எனக் கூறியுள்ளது பாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தமிழில் அவர் 2014ஆம் ஆண்டு வெளிவந்த தேரோடும் வீதியிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பின்னர் எந்த தமிழ் பட வாய்ப்புகளும் இல்லாததால் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப்த்தில் இவர் தென்னிந்திய சினிமாவைக் குறிப்பிட்டு ‘பெண்கள் (சினிமா நடிகைகள்) தென்னிந்திய சினிமாவை பற்றி தவறாக பேசுவதை நான் பார்க்கிறேன். அனால் தென்னிந்திய மொழி படங்கள், பாலிவுட் சினிமாவை விட மிக சிறந்தவை. அங்குள்ள நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மிகவும் நல்லவர்கள். தென்னிந்திய சினிமாதான் பாலிவுட்டோடு போட்டியிட தகுதியானது. பாலிவுட் காத்துக்கொண்டு இருக்கிறது… எப்போது தென் இந்திய சினிமா ஒரு நல்ல படத்தை ரிலீஸ் செய்யும். அதை ரீமேக் செய்யலாம் என்று’ எனக் கூறியுள்ளார்.