ஒருவருக்காவது உணவு கொடுங்கள்: நடிகை வேண்டுகோள்

செவ்வாய், 8 ஜூன் 2021 (21:58 IST)
இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒருவருக்காவது உணவு கொடுங்கள் என நடிகை ராஷிகண்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:
 
இன்றைக்கு லட்சக்கணக்கான மக்கள் உயிர் வாழத் தேவைப்படும் உணவு இன்றி உள்ளனர். இந்த பெரும் தொற்றால் பசியின் கொடுமை அதிகரித்துவிட்டது. வாழ்வாதார பற்றாக்குறையால் வருமானம் குறைந்து போனதாலும் அடிப்படை தேவையான உணவுக்கு வழியில்லாமல் போய்விட்டது
 
இந்தப் பெரும் தொற்றின் தொடரின் இரண்டாம் அலை பல ஏழைக் குடும்பங்களை பட்டினியில் தள்ளிவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக அனைவருக்கும் பணப்பற்றாக்குறை. நான் தனிப்பட்ட முறையில் ரொட்டி வங்கியுடன் இணைந்து வேலை பார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் பசியால் தவிக்கும் மக்களுக்கு ரொட்டி வங்கியினர் இடைவிடாமல் சாப்பாடு கொடுத்து வருகிறார்கள். இப்பொழுது நீங்களும் உதவ வேண்டிய நேரம் இது. உங்களால் 100 பேருக்கு உணவளிக்க முடியாவிட்டாலும் ஒருவருக்காவது உணவளிக்கலாம்’ என்று கூறியுள்ளார். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்