விதவிதமான போஸ்களில் ஜான்வி கபூர் வெளியிட்ட போட்டோஷூட்!

வெள்ளி, 31 மார்ச் 2023 (14:58 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதல்வரின் பேரனுமான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது அவர் ஜூனியர் என் டி ஆர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்காக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்