நடிகை சித்ரா தற்கொலை நிபுணர்குழு அறிக்கை தாக்கல் !
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:57 IST)
நடிகை சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் -9 ஆம் தேதி நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்டோரிடம் விசாரித்ததில் ஹேமந்த் அடிக்கடி மது அருந்திவிட்டு சித்ராவிடம் சண்டையிட்டதும், படப்பிடிப்பு தளத்திற்கே வந்து சண்டையிட்டதும் தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் சித்ராவின் தாயார் விஜயாவும் சித்ராவுக்கு பிரச்சனை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை ஒரு நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் சமீபத்தில் அவரது கணவர் ஹேமந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்தனர் போலீஸார்.
இந்நிலையில், சித்ராவின் நடத்தையில் கணவன் ஹேம்நாத் சந்தேகம் கொண்டதாலேயே அவர் ஹோட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக நசரத்பெட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்குத் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய குற்றப்பிரிவுக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டபின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், சித்ரா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்,இந்த வழக்கு விசாரணை வரும் 5 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்ததுடன் நாளை மறுநாள் இவ்வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.