தனுஷ் பட இயக்குநரை பாராட்டிய நடிகர் விக்ரம்

புதன், 14 ஏப்ரல் 2021 (17:56 IST)
நடிகர் விக்ரம், கர்ணன் பட இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரைப் பாராட்டியுள்ளார்.


இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘கர்ணன். இத்திரைப்படத்தை எஸ் .தாணு தயாரித்துள்ளார்.

இப்படம்நேற்று வெளியான நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்கள் வரை பலரும் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் படங்களிலேயே முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் புதிய சாதனை படைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இப்படத்தைப் பார்த்த நடிகர் விக்ரம், இயக்குநர் மாரி செல்வராஜின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவரைப் பாராட்டினார்.

நடிகர் விக்ரமின் இந்த செயலுக்கு ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கவுள்ள அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்