'மெர்சல்' மேஜிக்மேனின் அட்டகாசமான இன்னொரு போஸ்டர்

வியாழன், 22 ஜூன் 2017 (03:35 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 61வது படத்தின் டைட்டில் 'மெர்சல்' என்றும் ஜல்லிக்கட்டு வீரன் போஸ் உடனான முதல் பார்வை போஸ்டரும் நேற்று வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரபபை ஏற்படுத்தியது என்பது அனைவரும் அறிந்ததே



 


இந்த நிலையில் இதே படத்தில் இன்னொரு கேரக்டரான மேஜிக்மேன் கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் தோற்றம் கொண்ட போஸ்டர் ஒன்றும் நேற்று இரவு வெளியாகியுள்ளது. சிகப்பு கலரில் அட்டகாசமாகவுள்ள இந்த போஸ்டர் இன்று விஜய் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் #Mersal என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டாப் 10 ட்ரெண்டிங்கில் தொடர்ந்து சில மணி நேரங்கள் சாதனை செய்ததோடு விஜய்யின் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டியும், விஜய்க்கும் வாழ்த்து தெரிவித்தும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது தான் தாமதம் அதுக்குள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள ரசிகர்கள் பேனர், பிளக்ஸ் என்று அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்