கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் நடிகர் சந்திரசேகர். 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் 2003 ம் ஆண்டு “ நண்பா நண்பா “ திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். தற்போது வேளச்சேரி சட்டப் பேரவை தி.மு.க உறுபினராக உள்ளார்.