சிம்புவின் #VTK படக்குழுவை வாழ்த்திய நடிகர் சூர்யா !
வியாழன், 15 செப்டம்பர் 2022 (14:27 IST)
நடிகர் சிம்பு படத்திற்கு நடிகர் சூர்யா தன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு. இவர், நடித்துள்ள திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இன்று காலை படம் ரிலீஸ் ஆன நிலையில் நடிகர் சிம்பு ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.இப்படத்தைப் பற்றி பலரும் கருத்துக் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், கெளதம் மேனனின் ஆஸ்தான நடிகரான சூர்யா தன் டுவிட்டர் பக்கத்தில், ''வெந்து தணிந்தது காடு படத்தைப் பற்றி நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது, அதனால், இப்படத்தை விரைவில் பார்க்க இருக்கிறேன். இப்படத்தில் பங்காற்றியுள்ள சிம்பு, கெளதம் மேனன் இசையமைப்பாளார் ஏ.,ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என் வாழ்த்துகள் ''எனத் தெரிவித்துள்ளார்.