நடிகர் சிவாவின் ‘இடியட்’ படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (20:32 IST)
நடிகர் சிவாவின் ‘இடியட்’ படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?
நடிகர் சிவா நடித்து வந்த திரைப்படங்களில் ஒன்று இடியட். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இயக்குனர் ராம்பாலா இயக்கிய இந்த படத்தில் அக்சரா கவுடா, நிக்கிகல்ராணி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து விரைவில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் இதனை அடுத்து வரும் மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இன்று இந்த படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்து சிவா உள்பட படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர். இது குறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்கிரீன்ஸ் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்