மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தாய்லாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வனின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, அமிதாப் பச்சன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், அஷ்வின், லால், ரியாஸ் கான், மோகன் ராம், அர்ஜூன் சிதம்பரம், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட இந்திய திரையுலகைச் சேர்ந்த திறமையான நடிகர்கள் அனைவரும் நடித்து வருகின்றனர்.