அதன் பிறகு வசந்தபாலன் எடுத்த அரவான் தோல்வியடைந்தது. கடைசியாக வெளியான காவியத்தலைவன் அட்டர் ப்ளாப். அதனால், அடுத்த படம் எது என்பதில் குழம்பி நிற்கிறார் வசந்தபாலன். சென்னை வெள்ளத்தை மையப்படுத்தி படம் எடுக்கப் போவதாக அவர் சொன்னது, சொல் பேச்சிலேயே நிற்கிறது.
இந்நிலையில், விஜய் மில்டன் இயக்கிவரும் கடுகு படத்தில் முக்கியமான வேடத்தில் வசந்தபாலன் நடித்து வருகிறார். கடுகு படத்தில் ராஜகுமாரன் நாயகனாகவும், பரத் வில்லனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.